Monday, September 21, 2015

முதலாழ்வார்கள் வைபவம் - பொய்கை ஆழ்வார்

முதலாழ்வார்கள் வைபவத்தில் முதலில் நாம் ஒவ்வொருவருடைய வரலாற்றை தனித்தனியாக பகிர்ந்து கொண்டு பிறகு அவர்கள் மூவரும் எங்கே எப்படி ஒன்றக சேர்கிறார்கள் எங்கு சென்றார்கள் என்பதையும் பகிர்ந்து கொள்ளலாம். முதலில் முதல் ஆழ்வாரான பொய்கை ஆழ்வாரைப் பற்றி சிறிது பகிர்ந்துக் கொள்ளலாம்.

                                                       
                                                                பொய்கை ஆழ்வார்:

பிரம்ம தேவன் நாராயணனை யாகம் செய்து பூஜித்த பெருமை மிக்க நகரமும், சோழ பல்லவ மன்னர்களுக்கு தலைநகரமாக அனைத்து இயற்கை வளங்களோடும் செழிப்புற்று விளங்கிய தெய்வதிருநகருமான காஞ்சிபுரத்தில், தாமரை பொய்கைகளும் குளிர்ந்த சிற்றோடைகளும் செந்தாமரை, வெண்தாமரை, கெருங்குவளை, நீலோர்பவம் போன்ற தேன் சுரக்கும் மலர்களுடன் திருவெஃகா திருக்கோவிலின் சந்நிதி பார்ப்போரை வசீகரிக்கும் தன்மை உடையது.

அன்னங்கள் நீந்தி விளையாடும் அழகிய பொய்கைகளில் விண்ணவரும் கந்தர்வரும் நீந்தி களிப்பதும் தேவலோக அப்ஸர மாதர்கள் ஜலக்ரீடை புரிவதும் தெய்வாம்ச புகலிடமாக விளங்குகிறது.

எழில் கொஞ்சும் அந்த தாமரை பொய்கையின் நடுவே மடலவிழ்ந்த ஒரு மனோகரத் தாமரையில் ஸ்ரீமந்நாராயணன் திருக்கண் மலர்ந்தார்.  அப்பெருமானின் திருக்கரங்களில் சுடர் வீசும் பாஞ்சஸந்யம் எனப்படும் திருச்சங்கின் அம்சம் அப்போது ஒரு தெய்வக் குழந்தையாக அவதரித்தது.

ஸித்தார்த்தி வருஷம் ஐப்பசி மாதம் வளர்பிறையாம் அஷ்டமி திதி செவ்வாய்க்கிழமை திருவோண நக்ஷத்திரத்தில் அவதரித்த அந்த தெய்வ குழந்தையின் அதிமதுரக்குரல் கேட்டு தேவர்கள் பூமாரி பொழிந்தனர். இன்னிசை பண்ணிசைத்து மகிழ்ந்தனர்.

பொய்கையில் பிறந்ததால் பொய்கையார் என்று திருநாமம் சூட்டினர்.  திருமாலின் சேனைத்லைவன் திருமாலை வழிபடுவதற்குரிய திருவெட்டெழுத்தை முறையோடு அக்குழந்தையின் காதில் ஓதினார். அதனை வைணவர்கள் திரு இலச்சனைப் பெறுதல் என்பார்கள்.

பிறப்பிலேயே திருவெலாம் பெற்று வந்த பொய்கையார் கோகுலத்தில் கண்ணன் வளர்ந்தது போல திருவெஃகாவில் வளர்ந்து வந்தார்.

நடைபயிலும் பருவத்திலேயே அருந்தமிழ்கலையும் வேதபுராணங்களும் கற்றுணர்ந்தார். இருமைக்கும் துணை புரிவது திருமாலுக்குச் செய்யும் திருத்தொண்டு ஒன்றேயாகும் என்பதை நிலையாக நெஞ்சில் பதித்துக் கொண்டார்.அல்லும் பகலும் திருமாலின் அடிமலர் புகழ்ப் பாடிவரும் ஸ்ரீவைஷ்ணவ பக்தர்கள் இவரை பொய்கை ஆழ்வார் என்றே போற்றி பணிந்தனர். பொய்கை ஆழ்வாரின் தேனினும் இனிய கீதங்களைக் கேட்டு பக்தர்கள் மகிழ்ந்து பரமனையே கண்டது போல பெருமிதம் அடைந்தனர்.

காஞ்சியில் 18 வைஷ்ணவ ஷேத்திரங்களிலும் மங்களாஸாஸனம் செய்து எம்பெருமானை போற்றினார் பொய்கை ஆழ்வார். அதன் பின்னர் பொய்கை ஆழ்வார் தொண்டை மண்டலத்திலுள்ள திவ்ய ஷேத்திரங்களை தரிசிக்க திருவுள்ளம் கொண்டு பாதயாத்திரை புறப்பட்டார். பற்பல ஷேத்திரங்களை தரிசித்துக் கொண்டே திருக்கோவிலூரை அடைந்தார். அக்கோவிலில்  உள்ள உலகளந்த பெருமானை தரிசிக்க திருவுள்ளம் கொண்டார். அவர் செல்லும் வழியே தென்பெண்ணை ஆறு குறுக்கிட்டது. அதை கண்டதும் விரசை என்னும் பாலாறும் ஸ்ரீமந்நாராயணன் திருத்தோற்றமும் நினைவுக்கு வந்தது. அந்த கணமே பச்சை வண்ண மேனியையும் அவன் கார் குழலையும் கண்டார் பொய்கை ஆழ்வார். அந்த ஒளி பொருந்திய முகத்தில் கருணை மழை பொழியக் கண்டார். அங்கே திருமகளையும் கண்டார். கண்டதும் அவர் கண்கள் ஆனந்த குளமாகியது. அவரை பாடி பாடி பரவசமானார். பரமனை பாடி மகிழ்ந்து மெய்மறந்து நின்றிருந்தபோது இரவாகி போனது நினைவுக்கு வந்து சுய உணர்வு கொண்டு பார்த்த பொய்கை ஆழ்வார் என்ன செய்வது என்று யோசிக்கையில் சூறைக்காற்றும் மழையும் சூழ்ந்து கொண்டது.

அப்போது அவரது கண்ணில் ஒரு ஆசிரமம் கண்ணில் பட்டது.  மனதில் ஆர்வம்  எழும்ப அதை நோக்கி வேகமாக நடந்தார். மிருகண்டு முனிவர் அமைத்திருந்த ஆசிரமம் அது. அங்கே பொய்கையாழ்வார் சென்ற போது கதவு திறந்தே இருந்தது. யாரும் உள்ளே இருந்ததற்கான அறிகுறியே தென்படவில்லை. பொய்கையிழ்வார் மெதுவாக உள்ளே சென்றார்.
நடு இரவு...வெளியில் கொட்டும் மழை... இனி போவதற்கு வழியில்லை.....இங்கே ஓரிடத்தில் சாய்ந்து துயில் கொள்ளலாம் என்று முடிவெடுத்து கதவை தாழிட்டுக் கொண்டு வந்து, சோர்வு யாவும் நீங்க நெட்டி முறித்து காலை நீட்டிக் கொண்டு பரந்தாமா என்று கூறியபடியே படுத்து சற்று கண் அயர்ந்தார்.

நிற்க இந்த இடத்தில் இரண்டாம் ஆழ்வாரான பூதத்தாழ்வரைப் பற்றி சிறிது பகிர்ந்து கொள்ளலாம்.

முதலாழ்வார்கள் வைபவம் - பூதத்தாழ்வார்

                                                             பூதத்தாழ்வார்: 


கடல் வணிகத்திலும் சிற்ப கலையிலும் சிறந்த பெயர் பெற்ற நரசிம்மவர்ம பல்லவரால் தோற்றுவிக்கப்பட்ட நகரம் மஹாபலிபுரம். கலைக்கோவிலாக விளங்கும் இந்நகரில் எங்கு பார்த்தாலும் மலர்ந்த தோட்டங்கள் மல்லிகை பூக்கள் காடு போல் வளர்ந்து இருக்கும். கடலும் கடல் சார்ந்த இடத்தில் நீலோற்பவ மலர்கள் நிறைந்த தடாகங்களும் நிறைய உண்டு.

இந்த மல்லிகை தோட்டத்தின் நடுவே நீலோற்பவ மலர் ஒன்றில் சித்தார்த்தி ஆண்டு ஐப்பசி திங்கள் வளர்பிறையில் வரும் நவமிதிதி புதன் கிழமை அவிட்ட நக்ஷத்திர நாளில் திருமாலின் அம்சமான கதாயுதமே குழந்தையாக பிறந்தது.

ஸ்ரீமந்நாராயணனின் பேரருளால் திருஅவதாரம் பண்ணின இந்த குழந்தையே பூதத்தாழ்வார் ஆகும். மக்கள் அந்தகுழந்தையை பூதத்தான் என்று அழைத்தனர்.

அக்குழந்தையை பூமணத்தோடு வீசும் தென்றல் தாலாட்ட நீரிலே நீந்தி வரும் அன்னப் பறவைகள் சூழ்ந்து நின்று காக்க ஸ்ரீமந்நாராயணனும் பிராட்டியாரும் கருடாழ்வார் மீது ஆரோகணித்து பேரருளை மழைப் போல் வருவித்தனர். முகத்தில் காணப்பட்ட தேஜஸ் மெய்யன்பர்களை தடுமாறச் செய்தது. பூதன் என்ற சொல்லுக்கு ஆன்மா என்று பொருள். தன்னுயிர் போல்  மண்ணுயிரைப் பேணிக் காத்து வந்ததால் அக்குழந்தைக்கு பூதத்தாழ்வார் என்ற பெயர் நிலைத்தது.

அனைத்துக் கலையிலும் வல்லவராக விளங்கினார். எம்பெருமானையே அல்லும் பகலும் மனத்தில் வைத்து வழிப்பட்டு வந்தார். திருமகள் அவரது நாவில் நின்று நர்த்தனமாடினாள். செந்தமிழைச் செழிக்கக் கற்று பைந்தமிழ்ப் பாசுரங்கள் பல பாடியருளினார். எப்போதும் பரமன் புகழ் பாடும் பூதத்தாழ்வாரைச் சுற்றி அன்பர் கூட்டம் தேன் உண்ணும் வண்டாக கூடி இருந்தனர்.

'நமோ நாராயணாஎன்னும் எட்டெழுத்து மந்திரம் தான் பேரின்பத்தை எட்டிப் பிடிப்பதற்கு ஏற்ற வழி என்பதை தானும் உணர்ந்து உலகத்தாரையும் உணரச் செய்தார். உட்காரும் போதும்நிற்கும் போதும்,உறங்கும் போதும்நடக்கும் போதும்உண்ணும் போதும் எம்பெருமானையே எண்ணி மகிந்தார் பூதத்தாழ்வார்.

கடல்மல்லையில் பள்ளிக் கொண்ட பெருமானை அல்லும் பகலும் பைந்தமிழ் பாசுரங்களால் பாடி பரவசமடைந்த பூதத்தாழ்வாருக்கு தொண்டை மண்டலத்திலுள்ள மற்ற திருத்தலங்களை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது.

சுற்றிருக்கும் திவ்ய க்ஷேத்திரங்களுக்கு தொடர்ந்து சென்று எம்பெருமானை தரிசித்து வந்தார். உலகளந்த பெருமானை தரிசிக்க ஆசை கொண்டிருந்த அவரின் ப்ரார்த்தனையை அறிந்திருத்த பரந்தாமன் திருக்கோவிலூருக்கு வரும் படி அவருக்கு கனவில் உரைத்தார். திருமாலவனை பற்றிய ஆனந்த பரவசம் கொண்டு திருக்கோவிலூர் சென்றார் அவர். அக்கோவிலுக்குச் சென்று தரிசித்து விட்டு பகல் பொழுது போக்கி இரவு ஆனபோது இடியும் மழையும் சூறைக்காற்றும் பலமாக அடித்ததைக் கண்டு, இரவு தங்குவதற்கு இடம் தேடினர். அப்போது அவரது கண்ணுக்கு ஒரு ஆசிரமம் தென்படவே அதை நோக்கி விரைந்து அங்கு போய் தாளிட்டிருக்கும் கதவைத் தட்டினார்.  

நிற்க இந்த இடத்தில் மூன்றாவது ஆழ்வாரான பேயாழ்வாரைப் பற்றி சிறிது பகிர்ந்துக் கொள்ளலாம்.

முதலாழ்வார்கள் வைபவம் - பேயாழ்வார்


                                                                பேயாழ்வார்

திருமயிலையில் வைஷ்ணவக் கோயில்கள் பல இருந்தாலும் ஸ்ரீ ஆதிக்கேசவ பெருமாள் கோவில் மிகச் சிறப்புடன் விளங்குகிறது. இந்த கோவிலின் அருகில் திருமஞ்சன தீர்த்தம் எடுப்பதற்காக ஒரு கிணறு வெட்டப்பட்டு இருந்தது. அந்த கிணற்றின் தண்ணீர் தேங்கிய நீர் போல மிகச் சுவையை பெற்றிருந்தது. அந்த கிணற்றின் அமைப்பும் தண்ணீரின் சுவையும் அனைவரையும் இன்பத்தில் மூழ்க வைத்தது. அதில் எப்போதும் தண்ணீர் மேல் மட்டம் வரைக்கும் வற்றாமல் சிறப்பு தன்மையோடு இருந்தது. அப்படி தெய்வீகத்  தன்மையுடைய அந்த கிணற்றில் அதுவரைக்கும் யாருமே பார்த்திராத வண்ணம் புதுமையான பூவொன்று பூத்தது. அதை செவ்வல்லி என்று அழைப்பார்கள்.

சித்தார்த்தி ஆண்டு ஐப்பசி திங்கள் வளர்பிறை தசமி திதிவியாழக்கிழமை சதய நக்ஷத்திரத்தில் கண்ணன் தாங்கிய ஐந்து படைகளில் ஒன்றான நரந்தகம் என்னும் வாளின் அம்சமாக செவ்வல்லி மலரில் தேஜசோடு கூடிய தெய்வக் குழந்தை ஒன்று பிறந்தது. பிறந்த அடுத்த க்ஷணமே புன்முறுவல் பூத்த அந்த குழந்தையை சுற்றி பேரொளி பொங்கியது. குருகுலத்தில் சேர்ப்பதற்கு முன்னமே கொஞ்சும் தமிழ் அதன் நாக்கினில் பிறள ஆரம்பித்தது. நெகிழ வைக்கும் தமிழ் பாசுரங்களை நினைத்த நேரத்தில் பாடி வியக்க வைத்தது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணனுமாய் எம்பெருமான் நாமத்தை ஜபிக்க தொடங்கியது. எந்த பருவத்திலும் எம்பெருமானை பற்றிய பிதற்றலைத் தவிர வேறு எதையும் பார்க்காமல் இப்படி பித்தனாக வாழ்கிறானே என்று அவரை பேயன் என்று அழைத்தனர் பக்தர்கள். அடியார்களும் பக்தர்களும் அவரை பேயாழ்வார் என்று போற்றிக் கொண்டாடினர்.

கண்ணனின் வாளின் கூறாகப் பிறந்ததால் கூரிய அறிவுடையவராக திகழ்ந்தார். நீதி நூல்கள்அறநூல்கள்மதநூல்கள்பொதுவான நூல்கள் அனைத்தையும் எம்பெருமானாகிய ஆசானைக் கொண்டே முழுமையாகக் கற்று பெரும் அறிவோடு திகழ்ந்தார். நிறைக்குடமாக விளங்கிய பேயாழ்வார் எம்பெருமானின் அவதாரத்தைப் பற்றியும் அவர் புரிந்த திருவிளையாடல்கள் பற்றியும் நினைத்து நினைத்து பூரிப்படைந்தார். அல்லிக் கிணற்றில் பூத்திருக்கும் அல்லி மலர்களைப் பறித்து வந்து அனந்தனின் திருவடியில் சேர்த்து "நாராயணா நாராயணா" என்று நாள்பொழுதும் அவன் பெருமைகளை பாசுரங்களாக பாடி மகிழ்ந்தார்.

பேயாழ்வாரின் தேனினும் இனிய கீதங்களைக் கேட்டு பக்தர்கள் மகிழ்ந்து ஆடிப்பாடி பரமனையே நேரில் கண்டது போல் பெருமிதம் அடைந்தனர்.  பேயாழ்வார் தொண்டை மண்டலத்து க்ஷேத்திரங்கள் அனைத்திற்கும் சென்று பரந்தாமனை சேவிக்க பெரும் ஆவல் கொண்டார். தமது யாத்திரையை தொடங்கி வைஷ்ணவ பதிகளைச் சென்றடைந்து பாசுரங்களால் பரமனை போற்றி பணிந்தார். இறுதியாக பெருமாள் விருப்பப்படியே திருக்கோவிலூருக்கு வந்தடைந்தார்.திருக்கோவிலூரில் எம்பெருமானை சேவித்துக் களித்த நேரம் இரவாகிப் போன போது மழையும் புயலும் சேர்ந்து கொண்டது.  எங்கேயாவது அந்த இரவுப் பொழுதில் தங்கி களைப்புற விரும்பிய அவர் சுற்றும் முற்றும் பார்த்தார்.  அங்கே அருகில் முனிவர் ஆசிரமம் ஒன்று இருக்க கண்டு அங்கே போய் பூட்டி இருந்த கதவை தட்டினார்.

நிற்க: முதலாழ்வார்கள் மூவரின் சரித்திரத்தை தனித்தனியே பார்த்தோம். மூவரும் திருக்கோவிலூரில் உள்ள உலகளந்த பெருமாளை சேவித்து விட்டு ஆசிரமம் நோக்கி வந்த வரையில் பகிர்ந்து கொண்டோம். இனி மூவரும் சேர்ந்து என்னென்ன கைங்கர்யங்கள் புரிந்தனர் என்பதை பகிர்ந்து கொள்வோம்.

முதலாழ்வார்கள் வைபவம் - பேயாழ்வார்

முதலாழ்வார்கள் வைபவம் - பேயாழ்வார்


                                                                பேயாழ்வார்

திருமயிலையில் வைஷ்ணவக் கோயில்கள் பல இருந்தாலும் ஸ்ரீ ஆதிக்கேசவ பெருமாள் கோவில் மிகச் சிறப்புடன் விளங்குகிறது. இந்த கோவிலின் அருகில் திருமஞ்சன தீர்த்தம் எடுப்பதற்காக ஒரு கிணறு வெட்டப்பட்டு இருந்தது. அந்த கிணற்றின் தண்ணீர் தேங்கிய நீர் போல மிகச் சுவையை பெற்றிருந்தது. அந்த கிணற்றின் அமைப்பும் தண்ணீரின் சுவையும் அனைவரையும் இன்பத்தில் மூழ்க வைத்தது. அதில் எப்போதும் தண்ணீர் மேல் மட்டம் வரைக்கும் வற்றாமல் சிறப்பு தன்மையோடு இருந்தது. அப்படி தெய்வீகத்  தன்மையுடைய அந்த கிணற்றில் அதுவரைக்கும் யாருமே பார்த்திராத வண்ணம் புதுமையான பூவொன்று பூத்தது. அதை செவ்வல்லி என்று அழைப்பார்கள்.

சித்தார்த்தி ஆண்டு ஐப்பசி திங்கள் வளர்பிறை தசமி திதிவியாழக்கிழமை சதய நக்ஷத்திரத்தில் கண்ணன் தாங்கிய ஐந்து படைகளில் ஒன்றான நரந்தகம் என்னும் வாளின் அம்சமாக செவ்வல்லி மலரில் தேஜசோடு கூடிய தெய்வக் குழந்தை ஒன்று பிறந்தது. பிறந்த அடுத்த க்ஷணமே புன்முறுவல் பூத்த அந்த குழந்தையை சுற்றி பேரொளி பொங்கியது. குருகுலத்தில் சேர்ப்பதற்கு முன்னமே கொஞ்சும் தமிழ் அதன் நாக்கினில் பிறள ஆரம்பித்தது. நெகிழ வைக்கும் தமிழ் பாசுரங்களை நினைத்த நேரத்தில் பாடி வியக்க வைத்தது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணனுமாய் எம்பெருமான் நாமத்தை ஜபிக்க தொடங்கியது. எந்த பருவத்திலும் எம்பெருமானை பற்றிய பிதற்றலைத் தவிர வேறு எதையும் பார்க்காமல் இப்படி பித்தனாக வாழ்கிறானே என்று அவரை பேயன் என்று அழைத்தனர் பக்தர்கள். அடியார்களும் பக்தர்களும் அவரை பேயாழ்வார் என்று போற்றிக் கொண்டாடினர்.

கண்ணனின் வாளின் கூறாகப் பிறந்ததால் கூரிய அறிவுடையவராக திகழ்ந்தார். நீதி நூல்கள்அறநூல்கள்மதநூல்கள்பொதுவான நூல்கள் அனைத்தையும் எம்பெருமானாகிய ஆசானைக் கொண்டே முழுமையாகக் கற்று பெரும் அறிவோடு திகழ்ந்தார். நிறைக்குடமாக விளங்கிய பேயாழ்வார் எம்பெருமானின் அவதாரத்தைப் பற்றியும் அவர் புரிந்த திருவிளையாடல்கள் பற்றியும் நினைத்து நினைத்து பூரிப்படைந்தார். அல்லிக் கிணற்றில் பூத்திருக்கும் அல்லி மலர்களைப் பறித்து வந்து அனந்தனின் திருவடியில் சேர்த்து "நாராயணா நாராயணா" என்று நாள்பொழுதும் அவன் பெருமைகளை பாசுரங்களாக பாடி மகிழ்ந்தார்.

பேயாழ்வாரின் தேனினும் இனிய கீதங்களைக் கேட்டு பக்தர்கள் மகிழ்ந்து ஆடிப்பாடி பரமனையே நேரில் கண்டது போல் பெருமிதம் அடைந்தனர்.  பேயாழ்வார் தொண்டை மண்டலத்து க்ஷேத்திரங்கள் அனைத்திற்கும் சென்று பரந்தாமனை சேவிக்க பெரும் ஆவல் கொண்டார். தமது யாத்திரையை தொடங்கி வைஷ்ணவ பதிகளைச் சென்றடைந்து பாசுரங்களால் பரமனை போற்றி பணிந்தார். இறுதியாக பெருமாள் விருப்பப்படியே திருக்கோவிலூருக்கு வந்தடைந்தார்.திருக்கோவிலூரில் எம்பெருமானை சேவித்துக் களித்த நேரம் இரவாகிப் போன போது மழையும் புயலும் சேர்ந்து கொண்டது.  எங்கேயாவது அந்த இரவுப் பொழுதில் தங்கி களைப்புற விரும்பிய அவர் சுற்றும் முற்றும் பார்த்தார்.  அங்கே அருகில் முனிவர் ஆசிரமம் ஒன்று இருக்க கண்டு அங்கே போய் பூட்டி இருந்த கதவை தட்டினார்.

நிற்க: முதலாழ்வார்கள் மூவரின் சரித்திரத்தை தனித்தனியே பார்த்தோம். மூவரும் திருக்கோவிலூரில் உள்ள உலகளந்த பெருமாளை சேவித்து விட்டு ஆசிரமம் நோக்கி வந்த வரையில் பகிர்ந்து கொண்டோம். இனி மூவரும் சேர்ந்து என்னென்ன கைங்கர்யங்கள் புரிந்தனர் என்பதை பகிர்ந்து கொள்வோம்.

முதலாழ்வார்கள் வைபவம்



மூன்று ஆழ்வாரும் திருக்கோவிலூரில் எம்பெருமானை சேவித்து விட்டு ஒரு ஆசிரமம் நோக்கி விரைந்தார்கள் என்பதை பார்த்தோம்.  ஆசிரமத்திற்குள் கண் அயர்ந்தார் பொய்கை ஆழ்வார். அப்போது படபடவென யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. தூக்கம் கண்களை சுற்றும் நிலையில் இருந்த அவர் கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தார். 

கொட்டும் மழையில் நனைந்தபடி அடியார் போல யாரோ ஒருவர் நிற்பதை கண்டார்."ஸ்வாமி! இந்த கும்மிருட்டில் இப்படி கொட்டும் மழையில் நனைந்துக் கொண்டு இக்குடிசைக்கு வந்துள்ள அடியார் தாங்கள் யார் என்று நான் அறியலாமா?" என்று கேட்டார் பொய்கை ஆழ்வார். "இந்த எளியவனை உள்ளே ஏற்று கொள்வீரோ?" என்று அவர் பணிவோடு கேட்டார். "தாராளமாக வாருங்கள். இந்த உள்நடையில் ஒருவர் படுக்கலாம்இருவர் அமரலாம்.. தேவரீர் தாங்கள் உள்ளே வந்து எம்மோடு அமருங்கள்.""அடியேன் பூதத்தான்" என்று உள்ளே வந்தவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதும் "அடியேன் பொய்கையான்" என்று இவரும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.ஆழ்வார்  இருவரும் ஒருவரையொருவர் அறிந்து கொண்டதும் பேரானந்தம் அடைந்தனர்.   

பரந்தாமனின் லீலா வினோதங்களில் லயித்துப் போய் நெடுநேரம் பேசிக் கொண்டே இருந்தனர்.  நள்ளிரவு ஆகியும் இருவரும் தூங்கவில்லை. எம்பெருமானின் சுகானுபவத்தில்பேச்சில் திளைத்துக் கொண்டிருந்தபோது திடீரென யாரோ ஆசிரமத்து கதவை தட்டும் சத்தம் கேட்டது. பொய்கை ஆழ்வார் கதவை திறந்து எட்டி பார்த்தபோது அடியவர் ஒருவர் மழைக்கு ஒதுங்கி நிற்பதைக் கண்டார்.

 "தாங்கள் அடியவர் போலிருக்கிறீர். யாரென்று அறிந்துக் கொள்ளலாமா" என்றார் பொய்கை ஆழ்வார். "அடியேன் பெயர் பேயன். உமது ஆசிரமத்தில் எமக்கு இந்த இரவு மட்டும் தங்க இடம் தரவேண்டும்." "அதற்கென்ன உள்ளே வாருங்கள். நான் பொய்கையன்உள்ளே பூதத்தார் இருக்கிறார். இக்குடிலின் ரேழியில் ஒருவர் படுக்கலாம்இருவர் அமரலாம்மூவர் நிற்கலாம். வாருங்கள் உள்ளே" என்று கூறி பேயாழ்வாரை உள்ளே அழைத்துச் சென்றார் பொய்கை ஆழ்வார்.  சிறிய இடம் காரணமாக மூவரும் எழுந்து நின்றபடியே க்ஷேமலாபங்களை பேசினர்.

"பொய்கையாரே! எங்கள் இருவராலே தங்கள் உறக்கமும் கெட்டது. தாங்களுக்கு வீண் சிரமம் கொடுத்து விட்டோம்" என்று பேயாழ்வாரூம் பூதத்தாழ்வாரும் கூறினர். "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ஸ்வாமி. நாம் மூவரும் ஒன்றாக வேண்டும் என்பது உலகளந்த உத்தமனின் ஆணைப்போலும்" என்றார் பொய்கை ஆழ்வார்.

உண்மையே அது தானே. பன்னிரு ஆழ்வார்களில் முதலாழ்வார்கள் என்று போற்றப்படும் பொய்கையார்,பூதத்தார்பேயார் என்னும் முப்பெரும் ஆழ்வார்களையும் ஒன்று சேர்க்க ஏற்ற இடத்தையும் காலத்தையும் எம்பெருமான் திருவுள்ளம் கொண்டு எண்ணியதின் விளைவு தானே இது.

முதலாழ்வார்கள் மூவருமே ஒரே ஆண்டில் ஒரே திங்களில் தொடர்ந்து வந்த மூன்று நாட்களில் அடுத்தடுத்து பிறந்துள்ளனர். மூவரும் தாய் வயிற்றில் பிறக்காமல் தனித்தனி மலர்களில் திருமாலின் படைகளின் அம்சமாகவே தோன்றினார்கள். இறைவனின் திருவருளால் ஞானாசிரியர் இல்லாமலேயே அனைத்துத் துறை நூல்களையும் கற்றுத் தெளிந்தனர்.

பெருமானையன்றி பெரிய தெய்வம் இல்லையென்று எண்ணி அவனையே அல்லும் பகலும் அயராது வழிப்பட்டு வந்தனர். மாநில மக்கட்கு அவனின் பெருமைகளையே எடுத்துக் கூறினர். மூவெரும் ஒருவரை ஒருவர் அறியாமலேயே பல்வேறு இடங்களுக்குச் சென்று பரந்தாமன் வீற்றிருக்கும் கோவில்களை கண்டு சேவித்து வந்தனர். ஒரு நாள் முப்பெரும் ஆழ்வார்கள் கனவிலும் தோன்றி "இந்நாளில் திருக்கோவிலூரிலுள்ள த்ரிவிக்ரமனையும் பூங்கோவல் நாச்சியாரையும் கண்டு வழிபடுவீராக" என்று கூறி மறைந்தான் பெருமான்.  வெவ்வேறு இடங்களில் உறங்கிக் கொண்டிருந்த ஆழ்வார்கள் கனவுக்குப் பின் விழித்தெழுந்தனர். இறைவன் திருவருளைக் கண்டு வியந்தனர்.

அம்மூவரும் ஒரே நாளில் திருக்கோவிலூரை வந்தடைந்தனர். பெருமானைக் காண உள்ளே சென்றனர். பெருமானின் திருவருளைக் கண்குளிரக் கண்டனர். அவன் பெருமையை பைந்தமிழ் பாசுரங்களால் பாடி தொகுத்த்தனர். பகல் பொழுது கழிந்து இரவு பொழுது வந்தது. மழையும் சூறைக்காற்றும் ஒன்று சேர தங்க இடம் தேடி மூவரும் ஆசிரமம் வந்து சேர்ந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். ஆங்காங்கே கோயில் கொண்டுள்ள பெருமான் பிராட்டியாரின் பெருமைகளை பற்றியும்தீர்த்த மகிமைய்களைப் பற்றியும்திருத்தல வைபவத்தைப் பற்றியும் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

அந்த சமயம் வெண்ணையுண்ட கண்ணன் மூவரும் அறியா வண்ணம் தாயாரோடு அந்த இடைகழியில் வந்து நின்றான். சிறிய ரேழியில் எப்படியோ சிரமப்பட்டு நின்று கொண்டிருக்கும் அம்மூவருக்கும் திடீரென நெருக்கம் அதிகமாயிற்று. எவரோ மத்தியில் புகுந்து நெருக்குவது போல தோன்றிற்று. அந்த உணர்வு மூவருக்குமே பெரும் வியப்பாக இருந்தது.

"என்ன ஆச்சர்யம்! திடீரென எதனால் நமக்கு இந்த நெருக்கம் ஏற்பட்டது?" என்று அவர்கள் ஒருவரையொருவர் வியப்புடன் பார்த்து கேட்டுக் கொண்டனர். அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டனர். எவரும் இல்லை. ஞானக்கண்ணாகிய விளக்கை அவர்கள் மூவரும் ஏற்றி பார்த்த போது உண்மை விளங்கி விட்டது. திருமாலின் திருவிளையாடலை உணர்ந்து மூவரும் அன்புக் கண்ணீர் வடித்தனர். அப்போது அந்த இடத்தில் பேரொளி பிறந்தது. ஸ்ரீமந்நாராயணன் பிராட்டியாருடன் அம்மூவருக்கும் ப்ரத்யட்சண்யமானார்.  பரந்தாமனின் திருக்கோலம் கண்டு மூவரும் தனித்தனியே பாமாலை சூட்டி கண்ணில் நீர்மல்க நின்றனர்.

பொழுது புலர்ந்தது. ஆழ்வார்கள் மூவரும் பெண்ணையாற்றில் நீராடி திருமண் தரித்து துளசிமணி மாலைகளும் நவமணிகளும் துலங்க நாராயணனின்  நாமத்தை போற்றிய வண்ணம் பற்பல திருத்தலங்களை தரிசித்த வண்ணம் தங்களுடைய தலயாத்திரையை மேற்கொண்டனர்.

பொய்கை ஆழ்வார் - முதல் திருவந்தாதி என்ற ப்ரபந்தத்தை பாடினார். அவரால் திருவரங்கம், திருக்கோவிலூர், திருவெஃகா, திருவேங்கடம்,  திருப்பாற்கடல்,  திருபரமபதம் முதலான திருத்தலங்கள் பாடப்பெற்றன. பாஞ்ச சன்னியம் எனப்படும் திருச்சங்கின் அம்சமாக அவதரித்த அவர் பூவுலகம் உய்ய பெருந்தொண்டு ஆற்றினார்.

பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி என்ற ப்ரபந்தத்தை பாடினார். அவரால் திருவரங்கம், திருக்குடந்தை, திருதஞ்சை மாமணிக்கோயில், திருக்கோவிலூர், திருக்கச்சி, திருப்பாடகம், திருநீர்மலை, திருக்கடல்மல்லை, திருவேங்கடம், திருத்தண்கா, திருமாலிருஞ்சோலை, திருக்கோஷ்டியூர், திருப்பாற்கடல் முதலான திருத்தலங்கள் பாடப்பெற்றன. எத்தனையோ வழிகளில் பக்தர்களுக்கு பேரின்ப பாதையினை காட்டி பைந்தமிழ் பாசுரங்களைப் பதியச் செய்த பின்பு திருமாலின் திருக்கரம் தாங்கும் சுக்ருதத்தை முன்போல் திரும்பவும் பெற்று பிறவாப் பெருவாழ்வு வாழ்ந்தார். உலகம் முழுவதும் அறிவுச் சுடர் ஏற்றி ப்ரகாசிக்கச் செய்து ஞான ஒளியிலே நானிலம் போற்றும் ஸ்ரீமந்நாராயணனைக் கண்டார்.

பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி என்ற ப்ரபந்தத்தை பாடினார். அவரால் திருவரங்கம், திருக்குடந்தை, திருவிண்ணகரம், திருக்கச்சி, திருக்கோவிலூர், அஷ்டபுயகரம், திருவேளுக்கை, திருப்பாடகம், திருவெஃகா, திருவல்லிக்கேணி, திருக்கடிகை, திருவேங்கடம், திருமாலிருஞ்சோலை, திருக்கோஷ்டியூர், திருப்பாற்கடல், பரமபதம்  முதலான திருத்தலங்கள் பாடப்பெற்றன.

நம்மாழ்வார் வைபவம் - 1

நம்மாழ்வார் வைபவம் - 1


கலியுகத்தின் ஆதியில் வைகாசி விசாகத்தில் பாண்டிய தேசத்தில் உள்ள திருகுருகூரில் 'காரி'என்பவருக்கு குமாரராய் 'சேனைமுதலியார்எனப்படும் விஷ்வக்சேனரின் அம்சமாய் அவதரித்த சடகோப்பரை உபாஸிக்கிறேன்.

கலியுகத்தின் முதல் வருஷத்தில்வைகாசி விசாகத்தில்உலகங்களையெல்லாம் ரக்ஷிக்கும் விஷ்ணு பக்தியை நிலை நிறுத்துவதற்காக,  சேனை முதலியாரின் அம்சமாகஅவருடைய அருளினால் த்வயம் என்னும் திவ்யமந்திரத்தை உபதேசிக்க பெற்றவரும்திராவிட வேதத்தை அருளியவருமான சடகோப முனிவரை தியானிக்கிறேன்.

வேதத்தின் உத்திர காண்டமாகிய உபநிஷத்தைத் தமிழ் மொழியில் வெளியிட்ட உலகுக்கெல்லாம் அலங்காரபூதராய்,மகிழ்மாலை மார்பினரான நம்மாழ்வாரை வணங்குகிறேன்.

கலியுகத்தில் பிரமாதி என்ற முதல் வருடத்தில்,வைகாசி மாதத்தில் வெள்ளிக்கிழமையில் விசாக நக்ஷத்திரத்தில்சுக்லபக்ஷம் சதுர்தசியுடன் கூடிய அழகிய கடகலக்னத்தில், 'ஸ்ரீவிஜ்ஞாநஎன்னும் எழுத்துக்களால் ஏற்படும் நாற்பத்திரண்டு தினங்கள் சென்றபின் 'லாபஎன்னும் எழுத்துக்களால் கிடைக்கும் நாற்பத்து மூன்றாவது கலித்தினத்தில்வஸந்தருதுவில்,  நம்மை போன்றவர்களின் நல்வினைப்பயனாக மற்ற ஆழ்வார்களை அவயங்களாக கொண்டவரும்ப்ரபன்ன ஜநகூடஸ்தருமான பராங்குசர் அவதரித்தார்.

பாண்டிய நாட்டில் தாமிரபரணிக் கரையில் உள்ள திருக்குருகூரில் வேளாள வருணத்தில் எம்பெருமானுக்கே தொண்டு புரிந்து வரும் குலத்தில் பிறந்த திருவழுதிவளநாடர் என்னும் பரம பாகவதர் வாழ்ந்து வந்தார். அவர் குமாரர் அறந்தாங்கியார் என்பவர். அவர் பிள்ளை சக்ரபாணியார். அவர் பிள்ளை அச்சுதன். அவர் பிள்ளை செந்தாமரை கண்ணர். அவர் குமாரர் செங்கண்ணர். அவர் பிள்ளை பொற்காரியார். அவர் குமாரர் காரியார். அவருடைய திருக்குமாரர் தான் 'மாறன்என்றும், 'சடகோபன்என்றும், 'பராங்குசன்என்றும் பேர் பெற்றவரான உலகுய்ய வந்து அவதரித்தவர் நம்மாழ்வார்.

பொற்காரியார் தமது பிள்ளையான காரியாருக்கு திருமணம் செய்ய எண்ணிமலைநாட்டில்'திருவண்பரிசாரம்என்னும் திருப்பதியில் உள்ள 'திருவாழ்மார்பர்என்னும் திருமாலடியவருடைய குமாரத்தியான 'உடையநங்கைஎன்பவருக்கு மணம் பேசி முடித்துவிவாஹ மஹோத்ஸவத்தையும் மிகச் சிறப்பாக நடத்தி முடித்தார்.

காரியார் தன் மனைவி உடையநங்கை எனும் குணவதியோடு இல்லற வாழ்க்கையில் இருந்தபடி எல்லோருக்கும் இல்லை என்று சொல்லாது ஈகை பல செய்து வந்தார். தன் குலம் தழைக்க ஒரு குழந்தை இல்லையே என்ற கவலை இவர்களை வாட்டி எடுத்தது. ஒரு முறை இவர் தன் மனைவியுடன் தன் மாமனாரின் ஊர் சென்று திரும்பும் வழியில் திருக்குறுங்குடி என்னும் ஊரில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் நம்பி எம்பெருமானை சேவித்து தன் மனக்குறையைக் கண்ணீர் சிந்தி முறை இட்டார். இருவரும் கண்ணீர் சொரிந்தபடி வேண்டியவாறே கண்ணுறங்கினர். தன்னை நம்பி வாழும் பக்தர்களுக்கு அனைத்தையும் தந்துதவும் மாலவன் அன்றிரவு இருவர் கனவிலும் தோன்றி "நீங்கள் நற்கதியடையும் பொருட்டும் உலகம் உய்யும் பொருட்டும் என் அம்சமே அருஞ்செல்வனாகத் தோன்றும். வருத்தம் நீங்குவீராக" என்று கூறி மறைந்தார்.

விடிந்ததும் மிக ஆனந்தத்தோடு இறைவனை வணங்கி மாலை ப்ரஸாதங்களை பெற்றுக் கொண்டு திருகுருகூருக்கு எழுந்தருளி வாழ்த்து வருகையில் உடையநங்கையார் கருத்தரிக்க,எம்பெருமான் பாரெல்லாம் உய்யும்படி சேனை முதலியாரை நம்மாழ்வாராக அவதரிக்கும்படி நியமிக்கமேலே கூறியபடி கலி பிறந்த நாற்பத்து மூன்றாவது நாளில் கலித்தோஷத்தை அகற்றுவதற்காக விஷ்வக்சேனரின் அம்சமாக நம்மாழ்வார் அவதரித்தருளினார். இப்படி திருக்குறுங்குடி நம்பியின் அம்சமாகவும்சேனைமுதலியாருடைய அம்சமாகவும் ஆழ்வார் அவதரிப்பதற்கு முன்பே "சென்றால் குடையாம்" என்ற ரீதியில்,திருவநந்தாழ்வான் என்பவர் இவர் மீது மழை வெய்யில் முதலியன படாமல் ரக்ஷிப்பதற்காக திருகுருகூரில் ஒரு புளியமரமாக அவதரித்து வளர்ந்திருந்தான்.

நம்மாழ்வார் பிறந்த மாத்திரத்திலேயே ஞானமும் பிறந்தது. குழந்தை பிறந்த அன்று தொடங்கி அழுவதுதாய்ப்பால் உண்பது முதலிய உலக நடைக்கு ஒத்த செயல்கள் எதையும் செய்யாமல் இருந்த போதிலும் பகவதனுபவத்தாலே எந்த வாட்டமும் இல்லாது வளர்ந்து வந்தார். அவ்வதிசயத்தை கண்ட பெற்றோர் எம்பெருமான் மீது பாரத்தை போட்டுபிறந்த பன்னிரெண்டாம் திருநாள் அன்று திருகுறுகூரில் எழுந்தருளியிருக்கும்  பொலிந்து நின்ற பிரான் சன்னதிக்கு குழந்தையை எடுத்துக் சென்றுபிரானை சேவிக்கப்பண்ணி வைத்துஅப்பெருமான் திருமுன்பே பக்தி மயக்கத்திலே இருக்கும் அந்த தெய்வக்குழந்தைக்குஉலக நடைக்கு மாறாக இருந்ததினால் 'மாறன்என்ற திருநாமம் சூட்டி வளர்த்து வந்தனர். தத்தி விளையாட வேண்டிய குழந்தை பெருமானையே சுற்றிச்சுற்றி வந்தது கண்டு பெற்றோர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒருநாள் அக்குழந்தை அருகில் இருந்த புளிய மரத்தின் அடியில் அமர்ந்து அசைவற்று ஐம்புலன் அடக்கம் பூண்டது. அங்கேயே கண் விழிக்காமலும் வாய் திறந்து பேசாமலும் எதையும் உண்ணாமலும் மௌனமாகவே பதினாறு ஆண்டுகள் யோகத்தில் அமர்ந்திருந்தது.

எம்பெருமான் சேனைமுதலியாரை அனுப்பிஅவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரங்களையும் செய்வித்து எல்லா அர்த்தங்களையும் உபதேசிக்க செய்து மயர்வற மதிநலம் அருளினான். கர்ப்பத்தில் இருக்கும் போது குழந்தைகளின் அறிவை மறைக்கும் சடவாயுவை - பிறக்கும்போதே தம்மை மேலிடாதபடி ஹூங் காரத்தாலே ஓட்டியவராகையால் இவருக்கு 'சடகோபர்என்றும்திருவுள்ளம் உகந்து பொலிந்து நின்ற பிரான் ப்ரஸாதித்தருளிய மகிழ்மாலையை தரித்ததினால் 'நாட்கமழ் மகிழ்மாலை மார்பினன்'என்றும் 'மகிழ்மாலை மார்பினர்என்றும் 'வகுளாபரணர்என்றும் திருநாமங்கள் பெற்றார்.

Sunday, January 11, 2015

மதுரகவியாழ்வார்

மதுரகவியாழ்வார்


நம் மதுரகவியாழ்வார் அவதரித்த காலம் - கி.பி. 8 ம் நூற்றாண்டு ( 745 - 805)
இடம் - திருக்கோலூர்
ஆண்டு - ஈசுவர
மாதம் - சித்திரை
நட்சத்திரம் - சித்திரை(வெள்ளிக் கிழமை)
அம்சம் - வினதை (கருடன்)

நம் மதுரகவி ஆழ்வார் யாரென்று உங்களுக்கெல்லாம் நினைவிருக்குமென்று எண்ணுகிறேன். நம்மாழ்வாரின் மாணவன் தான் நம் மதுரகவியாழ்வார்.

'வைத்த மாநிதி பெருமாள்' வீற்றிருக்கும் திருக்கோலூர் என்னும் ஊரில், எந்நாளும், எப்பொழுதும் எம்பெருமானின் திருநாமத்தையே உச்சரித்து, அவர்பாலும், அவர்தம் அடியவர்பாலும் அன்பு செலுத்தும் அந்தணர் குலம் தோன்றிய மாணிக்கமே மதுரகவியாழ்வார் ஆவார்.

இவர்தம் சிறுவயதிலேயே சிறந்த பாடல்கள் இயற்றவும், கேட்போரின் செவியும் மனமும் குளிரும் வண்ணம் இனிய பாடல்களைத் தன் மதுரமான குரலில் பாடவும் வல்லவர். ஆனால், நிறைகுடம் ததும்பாது என்பதற்கேற்ப, நிரம்ப கற்ற இவருக்கு, நிலையற்ற இப்பூலோக வாழ்வின் மீது பற்றின்றி, எம்பெருமானின் திருப்பாதத்தைத் தேடிப் பற்றிக் கொள்ள புனித யாத்திரை மேற்கொண்டு, இந்தியாவில் உள்ள அனைத்து திருத்தலங்களுக்கும் சென்றார்.

கயா, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை ஆகிய ஊர்களுக்கெல்லாம் சென்று ஸ்ரீமன் நாராயணனைத் தரிசித்து, இறுதியாக அயோத்யா வை அடைந்தார். அங்கு அவர்தம் திருப்பயணத்தை முடித்துவிட்டு, தாம் பிறந்த ஊருக்கு வர புறப்பட்ட போதுதான், நம்மாழ்வாரிடம் அவரை அழைத்துச் சென்ற அந்த பேரொளியைக் கண்டார்.

அதன்பின் நடந்தவை உங்களுக்கே தெரியும். ஆமாம், நம் நம்மாழ்வாரை பார்க்க வைத்தது, அவரை பேச வைத்து அவரிடமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசுரத்தை திருவாய்மொழியாய் பெற்று, அவற்றிற்கு இனிய பண் அமைத்து, பாடியது எல்லாம் நம் மதுரகவியாழ்வாரே ஆவார்.

இவர் நம்மாழ்வாரைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டு அவர்மேல், கண்ணிநுண் சிறுத்தாம்பு என்னும் 11 பாக்களைக் கொண்ட பாடல் ஒன்றைப் பாடினார். இந்த கண்ணிநுண் சிறுத்தாம்பு என்னும் பாடல்தான், அந்த 4000 திவ்ய பிரபந்த பாடல்கள் என்னும் பொக்கிஷத்திற்கான திறவுகோல் ஆகும். இத்திறவுகோல் இல்லாவிடில், நமக்கு அந்த மகா பெரிய பொக்கிஷமே கிடைச்சிருக்காது, அது எப்படிங்கறத பின்னால சொல்றேன்... 'பின்'னால இல்ல... அப்பாலிக்கா சொல்றேன். ;-)

சிறந்த குரு பக்திக்கு, மதுரகவியாழ்வாரே சிறந்த எடுத்துக்காட்டு ஆவார். 'உண்ணும் சோறும், பருகும் நீரும், திண்ணும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே' என்று இருந்தவர் நம்மாழ்வார். ஆனால் மதுரகவியாழ்வாருக்கு எல்லாமும் நம் நம்மாழ்வாரேஆவார். மதுரகவியாழ்வார், கடவுள் மேல் கொண்ட பக்தியைக் காட்டிலும், தன் குரு மேல் கொண்ட பக்தியே அதிகம். அவர் கண்ணிநுண் சிறுத்தாம்பு என்று துவங்கும் 11 பாசுரங்களைத் தன் குருமேல் அந்தாதி முறையில் பாடினார். 4000 திவ்ய பிரபந்தத்தில் நம்மாழ்வாரைப் பற்றி அமைந்த இந்த 11 பாடல்களும் இறைவனைக் குறிப்பவை அல்ல.

நம்மாழ்வாரை நாம் அழைக்கும், 'வேதம் தமிழ் செய்த மாறன்' என்னும் பெயர் மதுரகவியாழ்வார் அளித்ததே! அதோடு 'அளவில்லா ஞானத்து ஆசிரியர்' என்றும் தம் குருவை மதுரகவியாழ்வார் அழைத்தார்.

மதுரகவியாழ்வார், நமக்களித்தப் பேரருள் இத்துடன் முடிந்துவிடவில்லை. அவர் இன்னும் பலவும் செய்தருளியிருக்கிறார். நமக்கு நம்மாழ்வாரப் பத்தி ஓரளவுக்குத் தெரியும், ஆனா அவர் எப்படி இருப்பார் ன்னு யாருக்காவது தெரியுமா? அந்த பெரும் பாக்கியத்த நமக்கு அளித்தவர் மதுரகவியாழ்வார் தான்.

எப்படின்னு கேக்குறீங்களா? அதாவது, தம் குருவுக்காக அவர் ஒரு விக்ரகம் செய்து, அவருக்கு அணுதினமும் அபிஷேகம், ஆராதணை செய்து வணங்க வேண்டுமென்று எண்ணி, தாமிரபரணி ஆற்று நீரைக் காய்ச்சி ஒரு விக்ரகமும் செய்தார். ஆனால், என்ன நடந்தது என்றால், அந்த விக்ரகம் வேறு ஒருவருடையது. அப்பொழுது, நம்மாழ்வார், மதுரகவியாழ்வாரிடத்தில் கனவில் தோன்றி, 'இவ்விக்ரகம் தன்னுடையது அல்லவென்றும், இது பின்னாளில் வரப்போகும் ஸ்வாமி ராமானுஜரின்(பவிஷ்யத் ஆச்சார்யார்)விக்ரகம் என்று கூறினார். அதன் பிறகு, நம்மாழ்வாருக்குத் தனியாகப் புது விக்ரகம் செய்தார். இவை இரண்டும் இன்னும் இருக்கின்றன.

அதனால் மதுரகவியாழ்வார், ஆழ்வார்க்கடியன் என்று அழைக்கப்படுகிறார்.

எனக்கு ஒரு சந்தேகம், மதுரகவி என்னும் பெயர் மதுரகவியாழ்வாரின் உண்மையான பெயரா? இல்லை வழங்குப் பெயரா? நான்கு வகை(ஆசுகவி, சித்திர கவி, விஸ்தார கவி, மதுரகவி)கவிகளில் ஒன்றுதான் மதுரகவி! அதான் ஒரு சின்ன டவுட்.

அப்படின்னா விகடகவி ன்னா என்னான்னெல்லாம், குறுக்கால கேட்கப்படாது! விகடகவி என்பது கவிஞரைக் குறிக்கும் சொல் அல்ல. அது நகைச்சுவையாய் பேசி, வினையாடுபவரைக் கூட குறிக்கும்.... ;-)

ஓம் நமோ நாராயணாய நம!!
மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்!!

Thursday, January 1, 2015

01  திவ்ய முத்துக்கள் 





உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்

மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்

துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே




பாசுர தொகுதி
பாசுர எண்
பாசுரம் அருளியவர்
அருளிய காலம்
பாசுர நோக்கம்
பாசுரம் பெற்ற திவ்யதேசம்
முதலாயிரம்
2791
3059 BC
இறைவனடி தொழுதல்


நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழியின் முதற்பாடல் இது. இறைவனை நம்பும் அனைத்து சமயங்களுக்கும் பொருந்துமாறு ஆரம்பிக்கிறார். 
உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்
இறைவனின் தன்மைகள் பற்றி முழுதுமாய் சொல்லமுடியாதஅளவு உயர் நலம் உடையவனாக அவன் இருக்கிறான். 

மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
அவனைப் பற்றி அறிந்துகொள்ளுவதற்கான நல்லறிவைத் தந்தவனுமாய் உள்ளான். 

அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
இறைத் தூதர்கள்,சித்தர்கள், முக்தர்கள் போன்ற அமர நிலை அறிந்தவர்களும் என்றும் போற்றும் அதிபதியாக உள்ளான். 

துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே
அப்படிப் பட்டவனின் சுடர் போன்ற அடிகளைத் தொழுது, உயர்வு கொள் மனமே என்பது எளிமையான பொருள்.